மத்திய பாஜக அரசின் தொழிலாளர் விரோத மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய அளவில் புதனன்று நடைபெற்ற வேலைநிறுத்தம் தமிழகத்திலும் எழுச்சியோடு நடைபெற்றது.சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் செங்கொடி சங்கம் சார்பில் துணைத் தலைவர் எல்.சுந்தரராஜன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் பி.சீனிவாசலு, துணைப் பொதுச்செயலாளர்கள் டி.ராஜன், ஜி.முனுசாமி, கே.தேவராஜ் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.