சென்னை:
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்ட சில இளைஞர்கள் கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்ச்சியாக அரேங்கேறி வந்தன. இதனையடுத்து, இந்த விளையாட்டுகளை தடை செய்யும் அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அந்த அவரச சட்டத்திற்கு நேற்று ஒப்புதல் அளித்தார்.இந்த அவசரச் சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதமும், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவோரின் கணினி, செல்போன் உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.தடையை மீறி விளையாடினால் ரூ.5,000 அபராதம் விதிக்கவும், 6 மாதம் சிறை தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது.