tamilnadu

img

முன்னாள் மாணவர்களின் 30ஆம் ஆண்டு பொங்கல் விழா

சிதம்பரம், ஜன. 14- சிதம்பரம் அருகே கீழ குண்டலபாடி கிரா மத்திற்கு கொள்ளிடம் ஆற்றைத் தாண்டி செல்ல வேண்டும். மழைக் காலங்களில் தண்ணீர் அதிகமாக வந்தால் இப்பகுதி மக்கள்  படகு மூலம் வந்து சிதம்பரம் மற்றும் நகரப்  பகுதிக்கு  செல்வார்கள். பள்ளி மாணவர்க ளும்  படகு மூலம் பள்ளிக்கு செல்வார்கள். இந்த பகுதியிலுள்ள திட்டுகாட்டூர், அக்கறை ஜெயங்கொண்ட பட்டினம் ஆகிய  கிராமங்கள் மழைக் காலங்களில் தீவாக மாறிவிடும். இப்பகுதி மக்கள் பல ஆண்டுக ளாக வைத்த கோரிக்கையின் அடிப்படை யில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் சிதம்ப ரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் முயற்சி யின் பேரில் அரசு புதிய மேம்பாலம் கட்டும்  பணிகள் நடைபெற்று வருகிறது. பழமை வாய்ந்த அரசு உதவி பெறும்  ராசப்பன் துவக்கப்பள்ளியில் 50 ஆண்டு களுக்கு முன்பு கல்வி பயின்ற மாணவர்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இப் பள்ளிக்கு வந்து சமத்துவ பொங்கலை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.  மேலும் நண்பர்களின் உதவியால், இந்த ஆண்டு பள்ளியில் படித்து வரும் மாண வர்களுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் தனி யார் பள்ளிக்கு இணையாக செய்து வருகி றார்கள். இது கிராம மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே, இந்த வருடம் கீழகுண்டல பாடி துவக்கப் பள்ளியில் நடந்த சமத்துவ  பொங்கல் விழாவில் முன்னாள் மாணவர்கள்,  தற்போது கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள்  கலந்து கொண்ட னர். இதனைத் தொடர்ந்து, இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 200 பேருக்கு  பரிட்சை  அட்டை, பேனா நோட்டு, டிபன் பாக்ஸ், ஜாமென்ட்ரி பாக்ஸ், பள்ளிக்கு குடிநீர் கேன், சுவிட் உள்ளிட்ட  பொருட்களை சீர்காழியி லுள்ள மருத்துவ தம்பதிகளான பாலாஜி-வானதி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வாடமலர், சமூக ஆர்வலர் யாமினி,  திட்டுகாட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் சிவாஜி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.