tamilnadu

img

பொங்கல் விழாவையொட்டி உயிரியல் பூங்காவிற்கு 300 சிறப்பு பேருந்துகள்

தாம்பரம், ஜன. 9- பொங்கல் விழாவையொட்டி உயிரியல் பூங்காவிற்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்  படுகின்றன.  இதுகுறித்து இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களுக்காக பூங்கா நிர்வாகம் முன்னேற்பாட்டு நடவ டிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், கூடுதல் முதன்மை தலைமை வனப்  பாதுகாவலர் (ம) இயக்குநர் யோகோஷ் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், எஸ்.சுதா, துணை இயக்குநர் சேகர், உதவி இயக்குநர் மற்றும் பிற துறை அலுவலர்களின் கூட்டம் நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்கா நிர்வாகம் பல முன்னேற்பாடுகள் மேற்கொண்டுள்ளது.  வரும் 14ஆம் தேதி உயிரியல் பூங்கா  திறந்திருக்கும். 15, 16, 17 ஆகிய தேதிகளில்  காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பூங்கா திறந்திருக்கும். பார்வையாளர்களின் வசதிக்காக 20 நுழைவுச்சீட்டு மையங்கள் ஏற்பாடு செய்யப்படும். இணையதளம் மூல மாக (www.aazp.in) மற்றும் vandalur zoo  செயலி மூலமாகவும் நுழைவுசீட்டு முன் பதிவு  செய்து கொள்ளலாம். அவ்வாறு முன்பதிவு செய்வோருக்கு கூட்ட நெரிசலை தவிர்க்கும்  பொருட்டு ஒரு சிறப்பு கவுண்டர் அமைக்கப் படும். பார்வையாளர்கள் டெபிட், கிரெடிட் கார்டு மூலமாகவும் கட்டணத் தொகையினை செலுத்தலாம். பாதுகாப்பிற்காக பல இடங்க ளில் பிரத்தியேகமாக கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை யின் மூலம் கண்காணிக்கப்படும். வாக னங்களை கேளம்பாக்கம் சாலையில் அறிஞர்  அண்ணா உயிரியல் பூங்கா புணர்வாழ்வு மையம் அருகில் நிறுத்த வேண்டும். வாகன  நிறுத்துமிடங்களில் இருந்து பூங்காவிற்கு வந்து செல்ல இலவச பேருந்து வசதி செய்  யப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் பிராட்வே, மெரினா பீச், கோயம்பேடு, வடபழனி, தி.நகர், அடையாறு, திருவான்மியூர், வேளச்  சேரி, ஆவடி, சோழிங்கநல்லூர், பூந்தமல்லி, திருப்போரூர், மாமல்லபுரம், தாம்பரம் மற்றும்  செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து 300  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கூடு தலாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கூடுதல் கழி வறை, மருத்துவ முதல் உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தாய்மார்கள் குழுந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு என இரண்டு இடங்களில் பாலூட்டும் அறை வசதி கள் உள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பிற் காக கையில் அடையாளச் சீட்டு கட்டப்படும்.  பொதுமக்கள் மது, சிகரெட், கரும்பு, ஆயு தங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட நெகிழி களை பூங்காவினுள் எடுத்துச் செல்ல அனு மதியில்லை.  எனவே பார்வையாளர்கள் அவற்றை கொண்டு வராமல் உரிய ஒத்து ழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.