சென்னை:
அதி தீவிர புயலாக நிவர் புயல் புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. இந்த நிலையில், நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் முதல் கட்டமாக 3 பேர் உயிரிழந்தனர்.சென்னை திருவல்லிக் கேணியில், சாலையில் சென்ற முதியவர் மீது மரம் முறிந்து விழுந்ததில், அவர் உயிரிழந்தார்.
ஆடுகள், மாடுகள் என 26 கால்நடைகள் நிவர் புயலுக்கு உயிரிழந்துள்ளது. 14 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன. மொத்தமாக 101 வீடுகள் சேதமடைந்துள்ளன.பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையோரங்களில் இருந்த 380 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
19 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது.தமிழகம் முழுவதும் 3,085 முகாம்கள் அமைக்கப்பட்டு, 40,182 குழந்தைகள் உட்பட 2 லட்சத்து 27ஆயிரம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.921 மருத்துவ முகாம்களும், 234 நடமாடும் மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு தேவையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகம் முழுவதும் புயலால் சேத
மடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் மாவட்ட வாரியாக துவங்கியுள்ளது என்றார்.
விரைவில் நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும் என்றும், முன்கூட்டியே திட்டுமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததின் விளைவாக, பெரிய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப் பட்டுள்ளது எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் விரைவில் இழப்பீடு குறித்து அறிவிக்கப்படும் எனவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.நிவர் புயல் காரணமாக 3 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை எந்த ஒரு மீனவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 101 வீடுகள் சேதமடைந்துள்ளன. 26 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.மாநிலம் முழுவதும் 3,085 சிறப்பு முகாம்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 317 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடியாக வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் கூறிய அமைச்சர் மீட்பு பணிகளுக்காக இரவு முழுவதும் கண்விழித்து காத்திருந்த காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந் திருக்கும் நன்றி தெரிவித்தார்.