நிவர் புயல் காரணமாக சென்னையிலிருந்து செல்லும் 24 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவா்’ புயல், அதி தீவிர புயலாக காரைக்கால்-மாமல்லபுரம் இடைப்பட்ட பகுதியில் புதுச்சேரி அருகில் புதன்கிழமை மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் புதுச்சேரி எல்லைகள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பேருந்துகள், ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக சென்னையிலிருந்து செல்லும் 24 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையத்திலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று (நவ.25) 23.59 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாகவும், பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கேட்டறியுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.