tamilnadu

img

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலேவின் 189வது பிறந்தநாள் நிகழ்ச்சி

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலேவின் 189வது பிறந்தநாள் நிகழ்ச்சி எல்லாபுரம் ஒன்றியம் மஞ்சங்காரணை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற்றது. மாணவர்கள் ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சாவித்ரிபாய் குறித்து கவிதை வாசிப்பு, பேச்சு போட்டி என மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.மோசஸ் பிரபு, மாவட்ட நிர்வாகிகள் மதிவாணன் மற்றும் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.