சிதம்பரம், ஜன. 18- கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றி யம் என்னநகரம் கிராமத்தில் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் சார்பில் 15ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா, பரிசளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பரிசுகள் வழங்கி பேசுகையில், இளை ஞர்கள் அரசியல் போராட்டத்திலும் பங்கெ டுக்க வேண்டும். தமிழ் கலாச்சாரத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும். விவசாயி கள் பிரச்சினை விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த வேண் டும். மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க, அரயலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க சாதி, மத, பேதங்களை கடந்து இளைஞர்கள் போராட முன்வர வேண்டும் என்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் வாஞ்சிநாதன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் கவி யரசன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா ளர் சிவராமன், தலைவர் தர்மதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.