tamilnadu

img

2 ஆயிரம் குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு: பி.ஆர்.நடராஜன் எம்பி வழங்கினார்

கோவை, ஜூன் 11–  

இரண்டாயிரம் குடும்பங்களுக் கான காய்கறி தொகுப்பினை மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பொதுமக்களுக்கு வழங்கினார். கொரோனா பெருந்தொற்று கார ணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட் டுள்ளது.

இதனையடுத்து மார்க் சிஸ்ட் கட்சியினர் கோவை மாவட் டத்தில் பல்வேறு நிவாரண நடவடிக் கைகள் முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக எஸ்.எஸ்.குளம் ஒன்றியக்குழுவிற்குட்பட்ட சிவானந் தபுரம் 2 ஆவது கிளையின் சார்பில் ஏழைஎளிய குடும்பங்கள் பயனடை யும் வகையில் காய்கறி தொகுப்பு வெள்ளியன்று வழங்கப்பட்டது. சிவா னந்தபுரம் பகுதியில் உள்ள 2 ஆயி ரம் குடும்பங்கள் பயனடையும் வகை யில் தக்காளி, கத்தரி, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை தொகுப்புகளாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்ற இந்நிகழ்விற்கு சிபிஎம் சிவா னந்தபுரம் கிளைச் செயலாளர் ஜெய காந்தன் தலைமை தாங்கினார். பொது மக்களுக்கு காய்கறி தொகுப்பினை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கொடுத்து துவக்கி வைத்தார்.  

இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி. இராமமூர்த்தி, எஸ்.எஸ்.குளம் ஒன் றிய செயலாளர் ஆர்.கோபால், ஒன் றியக்குழு உறுப்பினர்கள் சரவணம் பட்டி சண்முகம், குட்டி (எ)செந்தில்  மற்றும் திமுக சரவணம்பட்டி பகுதி கழக செயலாளர் சிவா, வட்ட கழக செயலாளர் சேட் உள்ளிட்ட தலைவர் கள் பங்கேற்றனர். முன்னதாக சிவா னந்தபுரம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே வாகனங்கள் மூலம் இலவசமாக விநி யோகிக்க மார்க்சிஸ்ட் கட்சியினர் ஏற் பாடு செய்திருந்தனர்.

;