tamilnadu

img

தொழிலாளர்களை சுரண்டும் இஎஸ்ஐ சிகிச்சைக்கு பணம் வழங்க மறுப்பு....

மதுரை:
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசிடம் தொழிலாளர்களை ஒட்டச்சுரண்டுவது எப்படி?, அவர் களின் ரத்தத்தை உறிஞ்சுவது எப்படி? என்ற வித்தையை கற்றுக் கொள்ள முடியும்.அதற்கு சான்று மதுரை இஎஸ்ஐமருத்துவமனை!பதிவு பெற்ற தொழிற்சாலைகள், பல்வேறு நிறுவனங்கள், பெரிய ஜவுளி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களிடம் அவர் கள் பெறும் சம்பளத்திலிருந்து ஒருகுறிப்பிட்ட சதவீதத்தை பிடித்தம்செய்து இஎஸ்ஐ-க்கு கட்டி வருகிறது. இதன் மூலம் தொழிலாளர் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரும் இஎஸ்ஐ மருத்துவமனையின் மூலம் பலனடைந்து வருகின்றனர்.

சில முக்கியமான அறுவைசிகிச் சைகளை தொழிலாளர்கள் தனியார்மருத்துவமனையில் செய்து கொண்டு அவர்களிடம் மருத்துவச் செலவு சான்றிதழை பெற்று இஎஸ்ஐ-க்கு வழங்கினால், இஎஸ்ஐ-நிர்வாகம் விதிக்குட்பட்டு நோயாளியின் அறுவை சிகிச்சைக்கு எவ்வளவு வழங்கமுடியுமோ அதை வழங்கவேண்டும்.இந்த நடைமுறை நீண்ட நாட்களாக உள்ளது. தற்போது அதையும் இஎஸ்ஐ-பறித்துவிட்டது.பல நூறு கோடி ரூபாய்களை தன்னகத்தே கொண்டுள்ள இஎஸ்ஐமருத்துவமனையில் கண் அறுவைச்சிகிச்சைக்கான எந்த ஏற்பாடும் இல்லை  என்பதுதான் அதிர்ச்சியானதகவல். தனியார் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு 2017-ஆம் ஆண்டுவரை  முறையாக பணம் வழங்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தனியாரிடம் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு பணம் வழங்க முடியாது என இஎஸ்ஐ நிர்வாகம் கூறிவிட்டது. இதனால் மாதம்ரூ.6000, ரூ.7000 சம்பளம் பெற்றுஇஎஸ்ஐ-சலுகை பெறும் தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

மதுரையில் தத்தனேரி தலைமைமருந்தகம் தவிர பல்வேறு இடங்களில் கிளை மருந்தகங்கள் உள்ளன. இதில் ஒரு மருத்துவமனையில் மட்டும் தொழிலாளர்களின் 800-மனுக்களை நிர்வாகம் திருப்பி அனுப்பிவிட்டது. 2018-முதல் 2020-ஆம் ஆண்டு வரை கணக்கிட்டால் மனுக்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டி நிற்கிறது.இஎஸ்ஐ-நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம் எனவிசாரித்தபோது, கண் அறுவை சிகிச்சைக்கென தற்போது இஎஸ்ஐ நிறுவனம் மதுரையில் சில தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த மருத்துவமனைகளில் தான் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர் களுக்கு பணம் தரக்கூடாது எனஉத்தரவிடப்பட்டுள்ளது. வேறுமருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களுக்கு பணம் தரக கூடாது என்று விதி இல்லை. இப்போது புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது தவறு. தொழிலாளர்கள் வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாலும் அவர்கள் அளிக்கும் சான்றிதழ்,மருத்துவத் தொகையை பரிசீலித்து இஎஸ்ஐ-நிர்வாகம் நிர்ணயித்துள்ள தொகையை வழங்க வேண்டும். கண் அறுவை சிகிச்சையைப்  பொறுத்த மட்டில் எந்த தனியார்மருத்துவமனை எவ்வளவு தொகைக்கு பில் வழங்கியிருந்தாலும் ரூ.9,703 தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டும். இஎஸ்ஐ-யின்புதிய விதியால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளி எவ்வளவு சம்பளம் பெறுவார் என்பது தெரியும். கிட்டத்தட்ட 800 மனுக்கள் திரும்பிவந்துள்ளன.

தொழிலாளி அளித்துள்ள ஒரு மனுவை முழுமையாக தயார் செய்வதற்கு குறைந்தது நான்கு மணி நேரமாகும். இரவு-பகலாக பார்த்த உழைப்பு வீணாகிவிட்டது. இதில் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள் தான். நீங்கள் முயற்சித்தால் மட்டுமேபணத்தைப் பெறமுடியும் என்று இஎஸ்ஐ ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரைச் சந்தித்தபோது, “ நான் மருத்துவராக இருந்தாலும் ஒரு கடை நிலைஊழியன் தான். ஒப்பந்தம் செய்யப் பட்ட மருத்துவமனைகளைத் தவிர பிற மருத்துவமனைகளுக்கு வழங்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர். தொழிலாளர் நலன்கருதி அவர்களைப் பாதுகாக்க வேண்டும். அனைத்துத் தொழிலாளரும் பலன்பெற வேண்டுமென்பதற் காகத்தான் (செவ்வாயன்று) கடிதம் தயாரித்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.

மற்றொரு ஊழியரிடம் பேசியபோது, ஒரு மனுவில் ஒரு மருத்துவர் குறைந்தது 15 பக்கங்களில் கையெழுத்திட வேண்டும். என்ன செய்துஎன்ன பயன்? எந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் தொழிலாளியின் பணத்தை அவர் களுக்கு வழங்குவதுதான் சரியாக இருக்கும். தொழிலாளர்கள் கேள்வியெழுப்பினால் மட்டுமே பலன் கிடைக்கும் என்றார்.தொழிலாளி ஒருவர் கூறுகையில், “இஎஸ்ஐ-மருத்துவமனை ஒப்பந்தம் செய்துள்ள மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற வேண்டுமென்பதை ஏற்க முடியாது. எங்களது பணம் இஎஸ்ஐ-யில் உள்ளது. நாங்கள் விரும்பிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதற்கான சான்றிதழை வழங்கினால், இஎஸ்ஐ-நிர்வாகம் விதிகளுக்குட்பட்டு வழங்கவேண்டிய பணத்தை வழங்குவதுதான் சரியானது”  என்றார்.

===பொற்செல்வி===

;