கோவை, டிச. 29 – சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒரே முகவரியில் 46 போலி வாக்காளர்கள் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது கோவை மாவட்டத்தில் சூலூர் உள் ளிட்ட 7 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் (டி.ச.30) நடைபெறு கிறது. இந்நிலையில் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முத்து கவுண்டன் புதூர் ஊராட்சியை சேர்ந்த ருக்மணி என்பவர் வீட்டு முகவரியில் ருக்மணி அவரது கணவர் சண்முகம் மற்றும் மகள் ரேவதி, மகன் விஜயகுமார் ஆகிய என 4 வாக் காளர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். கூடுதலாக 46 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஆனால் வாக்காளர் பட்டியலில் 50 பேர் அந்த முகவரியில் இடம் பெற்றுள்ளனர். தங்களது வீட்டு முகவரியைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத 46 பேர் வாக்காளர் அடையாள அட்டை பெற் றுள்ளதாகவும், அவர்களுக்கும் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவர்கள் யார் என கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் தெரி வித்துள்ளனர். மேலும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தங்களுடைய முக வரியை பயன்படுத்தி யாராவது வாக்க ளிக்க வந்தால் அவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இது குறித்து ருக்மணி சூலூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இதேபோல அதேபகுதியை சேர்ந்த ஜோதிமணி என்பவர் வீட்டில் 2 போலி வாக்காளர்கள் இடம் பெற்றிருப்பதாக புகார் அளித்துள் ளார். ஏராளமான போலி வாக்காளர் வாக் காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதா கவும், உள்ளாட்சி தேர்தலுக்காக போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு குளறுபடி செய்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.