tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

செம்படை வீரர்களுக்கு பாராட்டு விழா

ஈரோடு, மே 11- சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற செம்படை  வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட் டில் பங்கேற்ற செம்படை வீரர்களுக்கு ஈரோடு மாவட்டம்,  ஊனாத்திபுதூரில் பாராட்டு விழா சனியன்று நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிர மணி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்  கே.காமராஜ் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, ஆர்.கோமதி, எஸ்.சுப் ரமணியன், பி.சுந்தரராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. ராஜா, பா.லலிதா மற்றும் மூத்த தோழர் கே.துரைராஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக. தோழர் எம்.நாச்சிமுத்து முதலாமாண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. முடிவில், என்.நாகராஜன் நன்றி கூறினார். இதேபோல், கடம்பூர் மலை மற்றும் ஆப்பக்கூடலில் செம் படையினருக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது.

அறிவியல் மற்றும் கலைத் திருவிழா

அவிநாசி, மே 11- மே 12 – 14 ஆம் தேதி வரை கோடைக்கால குழந்தைகள்  அறிவியல் மற்றும் கலைத்திருவிழா நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம்,  சிறார்கள் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக் கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், கோடைக்கால குழந்தை கள் அறிவியல் மற்றும் கலைத் திருவிழா நடைபெற உள்ளது. அவிநாசியில் சேவூர் செல்லும் சாலையிலுள்ள கொங்கு கலை யரங்கத்தில், மே 12 ஆம் தேதி (இன்று) முதல் மே 14  ஆம் தேதி இம்முகாம் நடைபெற உள்ளது. இந்த வகுப்பா னது காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடை பெறும். 4 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் ராக்கெட் சயின்ஸ், காகிதம்  மடிப்பு கலை, அறிவியல் பரிசோதனைகள், பொம்மலாட்ட கலை, கதை சொல்லல், ஓவியம் வரைதல், கற்பனையும் கைத்திறனும், நாடகம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், குழந்தைகளுக்கான திரைப்படம் திரையிடுதல், கோளரங்கம் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றி தழ் வழங்கப்படும். மேலும் பதிவு கட்டணமாக ரூ.250 நிர்ண யிக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு  சலுகைகள் உண்டு, என நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் தெரி வித்துள்ளனர்.