tamilnadu

img

உட்கோட்டையில் வாக்கு சேகரிப்பு

அரியலூர், டிச.27- அரியலூர் மாவட்டத்தில் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி சார்பில் அரியலூர் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும்  அகிலாவின் சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் ஒன்றிய 15 வது வார்டு உறுப்பினர் பதவிக்காக திமுகவில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் பிரிதிவிராஜன் ஆகியேருக்கு வாக்கு சேகரிப்பு ஜெயங்கொண்டத்தை அடுத்த உட்கோட்டையில் பிரச்சாரம் தொடங்கி பல்வேறு பகுதிகளில் இருந்தும் தோழமை கட்சிகள் வாக்கு சேகரிப்பு துவங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் எம்.சின்னதுரை மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மகாராஜன் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.மீனா ஒன்றிய குழு உறுப்பினர் சி.உத்திராபதி ஒன்றிய செய லாளர் எம்.வெங்கடாஜலம் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் திமுகவின் தலைமை கழக பேச்சாளர் இளஞ்செழியன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

;