கோவை,டிச.28- கோவை காந்திபுரம் பகுதியில் சனி யன்று அதிகாலை வீட்டு உபயோக பொருள்கள் குடோனுக்கு மர்ம நபர் கள் தீ வைத்ததில் ரூ.20 லட்சம் மதிப்பி லான பொருட்கள் எரிந்து நாசமானது. கோவை காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, இரண்டாவது வீதியில் ரகுபதி என்பவருக்கு சொந்தமான வீட்டு உப யோக பொருள் மொத்த விற்பனை குடோன் உள்ளது. இவர் இங்கிருந்து பொருட்களை மற்ற கடைகளுக்கு விநி யோகம் செய்வது வழக்கம். இவரது குடோனில் ஏசி, வாசிங் மிசின், குளிர் சாதன பெட்டி, அயன்பாக்ஸ், ஏர்குலர் உட்பட பல்வேறு விதமான வீட்டு உபயோக பொருட்கள் வைத்து உள் ளார். இந்த நிலையில் காந்திபுரம் கிராஸ் கட் ரோடு இரண்டாவது வீதியில் உள்ள அவருடைய குடோனில் இருந்து காலை திடீரென புகை வந்தது. அதிகாலை நடைபயிற்சிக்கு சென்ற வர்கள் இதைப்பார்த்து கோவை சென்ட்ரல் தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் கொடுத்தனர். தீய ணைப்புத் துறையினர் சம்பவ இடத் திற்கு வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த சம்பவத்தில் 45 வாஷிங்மெஷின்கள், 4 குளிர் சாதனப் பெட்டி ஒரு மோட்டார் சைக் கிள் உட்பட ரூ.20 லட்ச ரூபாய் மதிப்பி லான மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகின. இதனையடுத்து ரகுபதி கோவை காந்திபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். முன்னதாக அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் ஒரு நபர் தீயை பற்றவைப்பது போன்ற காட்சி பதி வாகியுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ வைத்த மர்ம நபரை தேடி வருகின்ற னர்.அதிகாலையில் நடந்த இந்த சம் பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.