மேட்டுப்பாளையம், ஜன.12- மேட்டுப்பாளையத்தில் மதுபோதையிலிருந்த தந் தையை வெட்டி கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சிராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (48). முன்னாள் ராணுவீரரான இவருக்கு அமுதவள்ளி (42) என்ற மனைவியும், சச்சின்குமார் (17) என்ற மகனும் உள்ள னர். கருப்புசாமிக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருப்பதால் மனைவி அமுதவள்ளியும், மகன் சச்சின்குமாரும் கடந்த 6 வருடமாக கருப்புசாமியிடம் இருந்து பிரிந்து தனியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கருப்புசாமி தன் மனை விக்கு போன் செய்து பேச வேண்டும் என வீட்டிற்கு வரச் சொல்லி உள்ளார். இதனையடுத்து அமுதவள்ளி மற்றும் சச்சின்குமார் கருப்புசாமியின் வீட்டிற்கு சென்று உள்ள னர். அப்போது அங்கு குடி போதையிலிருந்த கருப்புசாமி இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் அப்பாவுக்கும் மகனுக்கும் கைகலப்பு ஏற்பட்டு, கருப்புசாமி அரிவாள் எடுத்து மகனை வெட்ட முயற்சி செய்துள்ளார். அப்போது மகன் அரிவாளை பிடிங்கி அப் பாவை சரமரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த கருப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சச்சின்குமாரை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர். மேலும் கருப்புசாமி யின் உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.