திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

img

பெரியார் குறித்து அவதூறு

நடிகர் ரஜினிகாந்த் மீது காவல்துறையில் புகார்

கோவை, ஜன. 17 –  தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி கோவை மாந கர காவல் ஆணையர் அலுவலகத்தில் திரா விட விடுதலை கழகத்தினர் வெள்ளியன்று புகார் அளித்தனர். சென்னையில் நடைபெற்ற துக்ளக்  விழாவில் பெரியார் குறித்து நடி கர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை  ஏற்படுத்தியது. பெரியாரை இழிவுப்ப டுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்  என திராவிட இயக்கத்தினர் தெரிவித்துள் ளனர்.  இந்நிலையில் இதுகுறித்து கோவை  மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் அவ்வமைப்பின் தலைவர் நேரு தாஸ் அளித்த புகாரில் கூறியிருப்ப தாவது, தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற  உள்நோக்கத்தோடு இப்படிப்பட்ட  ஒரு பொய்யான தகவலை பரப்பி பொது  அமைதியை குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 153ஏ மற்றும் 505 ஐபிசி பிரிவுக ளில் வழக்குப் பதிவு செய்து சட்ட நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

;