கோவை அரசு கலைக் கல்லூரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் திங்களன்று நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய கையெழுத்து இயக்கத்தில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதில் இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அசார், மாநிலக்குழு உறுப்பினர் ஆகாஷ், மாவட்ட துணைத் தலைவர் கயல் ஆகியோர் உடன் இருந்தனர்.