கோவை, ஜன. 21 – உரிமைகளுக்கான போராட் டத்தில் ஒரு ஜான் ஏறினால் ஐந்து முழம் சறுக்கி விடுகிறது. பால், பாலினம், பால் ஈர்ப்பு போன் றவை குறித்து புரிதல் மக்களி டையேயும், ஊடகத்தின ரிடையேயும் இல்லாததே இந்த சறுக்கலுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக மாறிய பாலினத்தோர் அமைப்பினர் வேதனை தெரி வித்தனர். கோவை பத்திரிகையாளர் மன் றத்தில் மாறிய பாலினத்தோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த ஊடகவியலாளர்கள் கலந் துரையாடல் நிகழ்வு செவ்வா யன்று நடைபெற்றது. இதில் நிறங்கள் அமைப்பின் இணை நிறுவனர் சிவா, நிர்வாகக் குழு உறுப்பினர் திருநம்பி செல்வம், டெல்பினா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பாலினம் என்பது என்ன? ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை கள், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பிகள் எதிர்கொள் ளும் பிரச்சனைகள், ஓரின சேர்க் கையாளர்களின் மனநிலை மற்றும் மாறிய பாலினத்தோரின் தேவைகள், எதிர்பார்ப்புகள் உள் ளிட்டவைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய நிறங்கள் அமைப்பின் இணை நிறுவனர் சிவா கூறுகையில், தமிழகத்தில் முதல்முறையாக மாறிய பாலினத் தோர் பங்கேற்கும் ஊடகவியலா ளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இதனை முன்வைத்து பல்வேறு மாவட்டங் களில் ஊடகவியலாளர்களைத் தொடர்பு கொண்டு எங்களின் கருத்துக்களை வலுவாக கொண்டு செல்ல இது உதவியாக இருக்கும். இந்நிகழ்வில் மாறிய பாலின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்ச னைகளை ஊடகவியலாளர்க ளுடன் பகிர்ந்து கொண்டோம். அவரவர் சுய விருப்பப்படி வாழலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள பொது புத்தியும், அதனை அப்படியே பிரதிபலிக்கும் திரைப்படம் உள்ளிட்ட ஊடகங்களும் எங்க ளின் முன்னேற்றத்திற்கு சில நேரங்களில் தடையாக உள்ளது. உலகில் உள்ள அனைத்து பொருட் களுமே ஆண், பெண் என்கிற அடையாளத்தோடு பிரிக்கப்ப டுகிறது. பால், பாலினம், பால் ஈர்ப்பு போன்றவை குறித்து அறிவியல் பூர்வமான புரிதல் மக்களிடையே இல்லை. அவர்கள் மனநிலை திருநர் குறித்து இழி வாக உள்ளது அல்லது அப்படி கட்டமைக்கப்படுகிறது. உலகிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக திருநங்கை களுக்கான நலவாரியம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் துவங் கப்பட்டது. முக்கிய துறைகளில் வேலைவாய்ப்பு அளித்து திரு நங்கையோ, திருநம்பியோ அவ ரவர் அடையாளத்தோடு வாழ்வ தற்கான அனைத்து வசதிக ளையும் கேரள அரசு செய்து கொடுத்திருக்கிறது. கேரளா தங்க ளுக்கு பாதுகாப்பான மாநிலம் என்கிற உணர்வு திருநர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தற்போது மாறிய பாலினத் தோர் அங்கு செல்வது அதிகரித் துள்ளது. மத்திய அரசு திருநங் கைகளுக்கு வழங்கும் சலுகை களை திருநம்பிகளுக்கு வழங்குவ தில்லை. இந்நிலையில் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள இதுவரை அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை. மத்திய அரசு மாற்று பாலினத் தோர் குறித்த 2019 மசோதா கூட உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முர ணாக முன்மொழிந்துள்ளது. ஆணோ, பெண்னோ, மாறிய பாலினமோ அவரவர் சுய அடை யாளத்தோடு எவ்வித தடையு மின்றி சுதந்திரமாக வாழும் ஒரு சமூக உருவாக்கமே மேம்பட்ட சமூ கமாக இருக்க முடியும். அத்த கைய சமூகத்தை உருவாக்க ஊட கங்கள் முன்னிற்க வேண்டும் என்கிற வேண்டுகோளை முன்வைத்தார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பல்வேறு ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.