tamilnadu

பூத் ஸ்லிப்பில் தேர்தல் தேதி மாற்றம்- குழப்பத்தில் வாக்காளர்கள்

கண்டுகொள்ளாத தேர்தல் அதிகாரிகள்

மேட்டுப்பாளையம், டிச. 26- கோவையில் வழங்கப்பட்ட பூத் ஸ்லிப்பில் தேர்தல் தேதி மாற்றி வழங்கியதால் வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிச.27 மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக நடை பெறுகிறது. இதன்படி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை ஊராட்சி ஒன் றியத்திற்கு உட்பட்ட 17 ஊராட்சி களுக்கு வரும் 30 ஆம் தேதி தேர் தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கார மடை ஒன்றியத்தில் 17 ஊராட்சி களில், 1 லட்சத்து 16 ஆயிரத்து 723 வாக்காளர்கள் உள்ளனர். வருகிற டிச.30 ஆம் தேதி இங் குள்ள 201 வாக்கு சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ள தாக ஏற்கனவே தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இந்நிலையில் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கதாசம் பாளையம் கிராம பஞ் சாயத்து பகுதிகளில் வருகின்ற டிச.27 ஆம் தேதி தேர்தல் நடை பெறுவதாக அறிவித்து தேர்தல் அதிகாரிகளால்  பூத் ஸ்லிப் வழங் கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதிகளில் வாக்குப்பதிவு 27ஆம் தேதியா? அல்லது 30ஆம் தேதியா? என வாக்காளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இதையறிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்களும் கலக்கத்தில் உள் ளனர்.  எனவே மாநில தேர்தல் ஆணையமும், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் பணியில் கவனக்குறைவாக இருந்த சம்பந் தப்பட்ட தேர்தல் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாக் காளர்களுக்கு எந்த தேதியில் தேர்தல் நடைபெறுகிறது என்று உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.