tamilnadu

img

ஜேஎன்யு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்

மாணவர், மாதர், வாலிபர் சங்கத்தினர் ஆவேசம்

கோவை, ஜன. 6 –  தில்லி ஜேஎன்யு பல்கலைக் கழ கத்திற்குள் புகுந்து மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய ஏபிவிபி குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் திங்களன்று மாணவர், மாதர், வாலிபர் சங்கத்தினர் கண்டன போராட்டங்களில் ஈடுபட்டனர். தலைநகர் தில்லியில் ஜேஎன்யு பல்கலை கழகம் உள்ளது. தலை சிறந்த அறிஞர்களை உருவாக்கும் பல்கலை கழகம் என்கிற பெயர் ஜேஎன்யுவிற்கு உண்டு. இந்நி லையில் மோடி அரசின் குடியு ரிமை சட்டத்திற்கு எதிராக வலு மிக்க போராட்டத்தை நடத்தியும், மத்திய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை அம்பலப்படுத்தியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் ஆத்திர மடைந்த பாஜகவின் மாண வர் அமைப்பான ஏபிவிபியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஞாயி றன்று இரவு முகமூடி அணிந்து  ஆயுதங்களோடு நுழைந்து அங்கி ருந்த மாணவர்கள் மற்றும் பேரா சிரியர்கள் மீது கொடூர தாக்கு தலை நடத்தினர். இதில் மாணவர் பேரவை தலைவரான ஆய்ஷே கோஷ் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் படுகாயமடைந்த னர். இச்சம்பவம் நாடு முழுவ தும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. ஏபிவிபி குண்டர்களை கைது செய்யக்கோரி நாடு முழுவ தும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக்கல்லூரியில் திங்க ளன்று இந்திய மாணவர் சங்கத் தின் தலைமையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் மாணவர் சங்கத் தின் மாவட்ட தலைவர் அசார், செயலாளர் தினேஷ் ராஜா உள்ளிட ஏராளமான மாணவர் கள் பங்கேற்றனர்.  அப்போது ஏபிவிபி குண்டர்களை கைது செய் யக்கோரி ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இனைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜோதிமணி மற்றும் வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார், மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் பங்கேற்று மத்திய அரசிற்கு எதிராகவும், ஏபிவிபி குண்டர்களை கைது செய்யக் கோரியும் ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

;