திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கு மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் ஆவேசம்

 கோவை, செப்.23– மத்திய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து தமிழகம் முழுவ தும் புதனன்று மத்திய தொழிற்சங்கங் கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. கொரோனா நோய்த்தொற்று காலத் தில் ஊதியக் குறைப்பு, வேலை நீக்கம், ஆட்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கை களை நிறுத்த வேண்டும்.  உடலு ழைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்கு ரூ.7 ஆயிரத்து 500 வீதம் தலா ரூ.22 ஆயி ரத்து 500 நிவாரணமாக வழங்க வேண் டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி யுள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா உள்ளிட்ட விவசாயி களுக்கு விரோதமான  மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங் கத்தினர் தமிழகம் முழுவதும்  புதனன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கங் கள் சார்பில் நூற்றுக்கணக்காண மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது. போக்குவரத்து, பிஎஸ் என்எல், வங்கி, எல்ஐசி, மின்வாரியம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த தொழி லாளர்கள் அலுவலக வாயிலில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவ டிக்கைக் குழுவின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், ஐஎன்டியுசி பாலசுந்தரம் , ஏஐடியுசி எம்.ஆறுமுகம், எச்எம்எஸ் ராஜாமணி, சிஐடியு எஸ். கிருஷ்ணமூர்த்தி, எல்பிஎஃப் ரத்தின வேல், எம்எல்எப் தியாகராஜன், ஏஐ சிசிடியு லூயிஸ், எஸ்டிடியு ரகுபுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, பல்லடம், காங்கேயம், ஊத்துக்குளி, உடுமலை உள்ளிட்ட 10க்கும் மேற் பட்ட இடங்களில் அனைத்து தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இதில், ஏஐடியுசி மாநில பொதுக் குழு உறுப்பினர் சௌந்தரராஜன், சிஐ டியு  மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன், மாவட்டக்குழு உறுப்பி னர் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் தொலை பேசி நிலையம், நல்லம்பள்ளி, மாரண் டஅள்ளி, அரூர், பென்னாகரம், காரி மங்கலம் ஆகிய இடங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சி.அங்கம்மாள், ஏஐசிசிடியு மாவட் டத் தலைவர் கோவிந்தராஜ், மாவட் டச் செயலாளர் முருகன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பி.மணி, எல்பிஎப் மாவட்டச் செயலாளர் பி.எம்.சண்முகராஜா, ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் மோகன், எச்எம்எஸ் மண் டலச் செயலாளர் கிருஷ்ணன் உள் ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண் டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கோபி செட்டிபாளையம், அந்தியூர் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. இதில், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

சேலம்

சேலம் நல வாரிய அலுவலகம் முன்பு ஏஐடியுசி மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு சார்பில் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் மாவட்டச் செயலாளர் டி. உதயகுமார் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, ஏ. கோவிந்தன், ஆர். வைரமணி, எல்பிஎப் சார்பில் பழனியப் பன், ஐஎன்டியுசி சார்பில் வடமலை, எச்எம்எஸ் சார்பில் கணேசன், ஏஐசிசி டியு சார்பில் வேல்முருகன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம் குன்னூர் விபி தெருவில் நடைப்பெற்ற ஆர்ப்பாட் டத்தில் எல்பிஎப் மாநில துணைத்தலை வர் செல்வராஜ், சிஐடியு தொழிற்சங் கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.ரமேஷ், ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் ராம சாமி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழி யர் சங்கத்தின் குன்னூர் கிளை செய லாளர் இளங்கோவன், சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் அமைப்பாளர் யோகேஷ்,சாலை யோர வியாபாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் ரஃபிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி னர்.

;