கேரள சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் முன்மொழிந்தார்.
முஸ்லீம்களை தனிமைப்படுத்தும் நோக்குடன் மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. மோடி அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. பாரதீய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் இந்த சட்டத்தை ஏற்று கொள்ள மாட்டோம் என கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜகவின் கூட்டணியில் இருக்கும் மாநில அரசுகளே மக்களின் கடும் எதிர்ப்பை கண்டு சட்டத்தை அமல்படுத்துவதிலிருந்து பின்வாங்கத்துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார்.
இதைத்தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரித்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.