திருவனந்தபுரம், மே 25-ஒரு தேர்தலில் தோற்ற உடன்இடதுசாரிகளை புறந்தள்ளிவிடலாம் என்கிற நப்பாசைகளுக்கு பதிலடி கொடுத்து மீண்டு வந்தவரலாறு கேரளத்தில் உள்ளது எனசிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.திருவனந்தபுரத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் கல்வி முகாமை சனியன்று துவக்கி வைத்தகொடியேரி மேலும் பேசியதாவது: 1977 மக்களவைத் தேர்தலில் கேரளத்தில் சிபிஎம்முக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழி்த்து 1979இல் நடந்தஉள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை சிபிஎம் கைப்பற்றியது. அந்த தேர்தலில் யுடிஎப்தகர்ந்தது. பல கட்சிகள் இடதுசாரிகள் பக்கம் வந்தன.1980இல் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. 1984 மக்களவைத் தேர்தலில் ஒரு இடம் மட்டுமே சிபிஎம்க்கு கிடைத்தது. கோட்டயம் தொகுதியில் சுரேஷ்குரூப் மட்டும் வெற்றி பெற்றார்.இடது ஜனநாயக முன்னணி சார்பில்வடகரயில் கே.பி.உண்ணிகிருஷ்ணனும், மாவேலிக்கரையில் தம்மான் தாமசும் வெற்றி பெற்றனர்.17 இடங்களில் யுடிஎப் வெற்றி பெற்றது. 1985இல் கட்சியின் மாநிலமாநாடு நடந்தது. அதில் சாதிமத சக்திகளுக்கு எதிராகவும்,வகுப்புவாத அரசியலுக்கு எதிராகவும் மதச்சார்பின்மைக்காகவும் வலுவாக போராடுவது என கட்சிமுடிவு செய்தது. சாதிமத சக்திகளுடனான கட்சியின் உறவு முறித்துக்கொள்ளப்பட்டது. 1987இல் சட்டமன்றத்துக்கான தேர்தல் வந்தது. இடதுசாரிகளுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்று ஊடகங்கள் கூறின. ஆனால், எல்டிஎப் வெற்றி பெற்றது. இ.கே.நாயனார் முதல்வர் ஆனார்.ஒரு தோல்வியைக் கொண்டு இடதுசாரிகளை துடைத்து எறிந்துவிடலாம் என்று கருத வேண்டாம். வலுவான அடித்தளம் இங்கு இடதுசாரிகளுக்கு உள்ளது. தேர்தல் தோல்வி கண்டு துன்பப் படுவதும்,வெற்றி பெற்றால் அதிக இன்பம் கொள்வதும் இடதுசாரிகளின் பழக்கம் அல்ல. வெற்றி தோல்விகளை கணக்கில் கொண்டு முன்னேற்றம் காண முடியும்.இப்போதைய தோல்வி தற்காலிகமானது. மிக வலுவான அமைப்பு – அரசியல் செயல்பாடுகளை கொண்டிருந்தபோதும் எவ்வாறு தோல்வி ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்வோம். அந்த மதிப்பீடுகளை புரிந்துகொண்டு ஒவ்வொரு துறையிலும் மாற்றங்கள் செய்யப்படும். தோல்விக்கான காரணம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படும். ஒரு மேலோட்டமான பரிசீலனை அல்ல. பூத் அளவில் அந்த பரிசீலனை நடக்கும் என கொடியேரி தெரிவித்தார்.மேலும் அவர் பேசுகையில், சபரிமலையின் பெயரால் பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கூறி கேரளத்தைகைப்பற்ற பாஜக முயன்றது. மாநிலத்தில் கலவரம் ஏற்படுத்துவதாகவே ஆர்எஸ்எஸ் அணுகுமுறை இருந்தது. அதை தடுத்து நிறுத்தியது இடதுசாரிகளே. மாநில அரசின் சாதுர்யமான தலையீடுகளால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இல்லையென்றால் மாராடு கலவரம்போல், நிலைக்கல்ரகளை போல கேரளம் முழுவதும்வகுப்புவாத கலவரம் நடத்தியிருப்பார்கள் எனவும் கொடியேரி கூறினார்.