tamilnadu

img

சிஏஏவுக்கு ஆதரவாக மோடிக்கு கடிதம் எழுத  குஜராத் பள்ளி மாணவர்களை வற்புறுத்தும் பாஜக

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து குஜராத்தில் பள்ளிக் குழந்தைகளை மோடிக்கு கடிதம் எழுத பாஜகவினர்  வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந் நிலையில், குஜராத்தில் பள்ளி குழந்தைகள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து  பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம்  எழுதுமாறு  உள்ளூர் பாஜக பிரமுகர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.  பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வகுப்பறைகளில் கரும்பலகையில் எழுதப்பட்ட உரையை நகலெடுக்க பள்ளி குழந்தைகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். 
ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் குறைந்தது 50 அஞ்சல் அட்டைகளை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்புவதை உறுதி செய்யுமாறு பாஜகவினர் வலியுறுத்துகின்றனர்.  குஜராத்தில், குடியுரிமை குறித்த அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு அதிகாரப்பூர்வமற்ற தடை அமலில் இருப்பதாக தெரிகிறது.