இந்திய கிரிக்கெட் அணி 3 டி-20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக மேற்கு இந்தியத் தீவுகளுக்கு (விண்டீஸ்) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொ டரின் முதல் இரண்டு ஆட்டங்களுக்கான விண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் விபரம்
கார்லஸ் பிரத்வெயிட் (கேப்டன்), ஜான் கேம்பல், எவின் லீவிஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், நிக்கோலஸ் பூரான், கீரன் பொல்லார்ட், ரோவ்மேன் பவல், கீமோ பால், சுனில் நரைன், ஷெல்டன் காட்ரல், ஒஷேனே தாமஸ், அந்தோணி பிராம்பெல், ஆண்ட்ரே ரசல், காரி பீய்ரே. டி-20 தொடர் அமெரிக்காவின் புளோரிடா வில் உள்ள பிரோவார்ட் கவுண்டி மைதானத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.