ஐபிஎல் போட்டிக்கு இணையாகவும், இந்தியாவில் கால்பந்து போட்டியைப் பிரபலமாக்கவும் கடந்த 2013-2014-ஆம் ஆண்டு ஐஎஸ்எல் கால்பந்து தொடர் தொடங்கப்பட்டது. இதுவரை 5 சீசன்கள் நிறைவு பெற்ற நிலையில், 6-வது சீசன் ஞாயிறன்று கொச்சியில் (கேரளா) தொடங்கியது. கேரளா - கொல்கத்தா அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் கேரள அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டம்
ஜாம்ஷெட்பூர் - தில்லி
இடம் : ஜேஆர்டி டாடா மைதானம், ஜாம்ஷெட்பூர்
நேரம் : இரவு 7:30 மணி