ரூ.71 ஆயிரம் கோடி அளவிற்கு சுருட்டல்
புதுதில்லி, டிச.25- 2018- 2019 நிதியாண்டில் வங்கி முறைகேடுகள் 74 சதவிகிதம் அதி கரித்திருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளது. அதில், நாடு முழுவதும் நடப்பு நிதியாண்டில் 6 ஆயிரத்து 801 வங்கி மோசடி சம்பவங்களில் ரூ. 71 ஆயி ரத்து 543 கோடி அளவிற்கு மோசடி நடந்துள்ளது. இதுவே கடந்த 2017-18 நிதி யாண்டில், 5 ஆயிரத்து 916 சம்பவங்க ளில் மொத்தம் ரூ. 41 ஆயிரத்து 167 கோடி ரூபாய் மோசடி நடந்தி ருந்தது. எனவே, 2018-19 நிதியாண்டில் முந்தைய ஆண்டைவிட 74 சதவிகி தம் அளவிற்கு முறைகேடு அதி கரித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் 55.4 சதவிகிதம், தனியார் வங்கிகளில் 30.7 சதவிகிதம், வெளிநாட்டு வங்கி களில் 11.2 சதவிகிதம் என்ற அள வுக்கு இந்த முறைகேடுகள் அரங்கே றியுள்ளன. அதேநேரம் அனைத்து வங்கி களின் நிகர வராக் கடன் அளவு 2019 மார்ச் இறுதியில் 9.1 சதவிகித மாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இது 2018 மார்ச் இறுதி யில் 11.2 சதவிகிதமாக இருந்துள் ளது. அனைத்து வங்கிகளின் மொத்த வராக் கடன் விகிதம், தொடர்ந்து 7 ஆண்டுகளாக அதிகரித்திருந்த நிலையில், தற்போது 3.7 சதவிகித மாக குறைந்துள்ளது.