விவசாயிகளின் பயிர் கடன்களுக்கான வட்டி மானியத்தை ரத்து செய்த மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு துணைத் தலைவர் என்.சாரங்கன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், செயலாளர் கே.நேரு, துணை செயலாளர்கள் சுகுமார், லிங்கநாதன், இ.லாரன்ஸ், எம்.ஆறுமுகம், சம்பத், ஆனந்தவேல், கைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் கே.ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.