காஞ்சிபுரம் அடுத்த அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உதவியுடன் சிறப்பு கண்ணாடியை பயன்படுத்தி சூரிய கிரகணத்தை பார்த்து மகிழ்ந்தனர். பள்ளி தலைமையாசிரியர் தணிகையரசு, அறிவியல் ஆசிரியர் தி.சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.