கோலார், ஏப்.14-தன்னைக் காவலாளி என்றும், ஊழலை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என் றும் பிரதமர் மோடி கூறிக்கொள்கிறார்; ஆனால், மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் நாட்டின் விவசாயிகள் நிலை, வேலையின்மை நிலவரம் மற்றும் ஊழல் குறித்து பேச மறுக்கிறாரே அது, ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.