பெங்களூருவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது சங்பரிவார் கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெங்களூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது சங்பரிவார் கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.