tamilnadu

img

சீன மருத்துவ பல்கலை.யின் சிறந்த மாணவருக்கான விருது...

கரூர்:
சீனாவின் மிகச் சிறந்த மருத்துவ பல்கலைக்கழகமான ஜின்ஜோ மருத்துவ பல்கலைக்கழகத்தில் உலகத்தின் அனைத்துநாடுகளின் மாணாக்கர்கள் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர். இந்த ஆண்டின் மிகச் சிறந்த மாணவர்களாக அந்த பல்கலைக்கழகம் எட்டு மாணவர்களை தேர்வு செய்துள்ளது.

அதில் இந்தியாவிலிருந்து இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி சந்தனா மட்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் தமிழ்நாட்டை சார்ந்தவர். இவர் இந்தியாவிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவரும் முதல் மாணவரும் ஆவார். இவர் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ்மாநில துணைத் தலைவர் இளங்கோ-கல்பனா தம்பதியரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

;