tamilnadu

img

கரூர் மாவட்டத்தில் போலி சுகாதார அட்டைகளை வழங்கி மக்களிடம் பணம் பறிக்கும் பாஜகவினர்...

கரூர்:
தமிழக அரசின் சுகாதார காப்பீட்டுத்திட்ட அட்டை போல போலியாக ஒருஅட்டையை தயாரித்து கரூர் மாவட்டபாஜகவினர் பணம் வசூல் செய்வதாககாங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி புகார் எழுப்பியுள்ளார்.தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது கலைஞர் காப்பீட்டு திட்டம் என்னும் பெயரில் தொடங்கப்பட்டு அதிமுகஆட்சியில் அது அம்மா மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என மாற்றப்பட்டு தொடர்கிறது.

இந்த காப்பீட்டு திட்ட அட்டையை பாஜக தலைவர்களின் படங்களுடன் போலியாக அச்சடித்து கரூர் மாவட்ட மக்களுக்கு அளித்து வருவதாகவும் இந்த காப்பீட்டுக்காக கிராமமக்களிடம் பாஜகவினர் பண வசூல்செய்ததாகவும்  காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.  உண்மையான அட்டை மற்றும் பாஜகவினர் வழங்கும் போலி அட்டையையும் அவர் காண்பித்தார்.

இது குறித்து ஜோதிமணி எம்.பி.மேலும் கூறுகையில், திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு அதன் பிறகு அதிமுக அரசால் தொடரப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைமூலம் மட்டுமே மக்கள் பயனடைய முடியும்.   ஆனால் பாஜகவினர் தங்கள் தலைவர்கள் படத்துடன் ஒரு போலி அட்டையை அச்சடித்து கரூர் மற்றும் திருப்பூர்மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அளித்து வருகின்றனர். இந்த போலிஅட்டைக்காக ஏழை எளிய மக்களிடம்இருந்து பாஜகவினர் ரூ.100 முதல் ரூ.200 வரை பணம் வசூலித்துள்ளனர்.இந்த அட்டையில் உள்ள கரூர் மாவட்ட பாஜக தலைவர்கள் இந்தஅட்டைகளை நேரடியாகக் கரூரில் பலஇடங்களில் வழங்கி வருகின்றனர்.   இந்த ஊழல் நிச்சயமாக பாஜக தலைவர்களுக்குத் தெரிந்துதான் நடந்திருக்கும். பாஜகவினர் மக்களை ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்கள் என்றாலும் தற்போதைய கொரோனா பாதிப்பு காலத்தில் இரக்கமற்று மக்களிடம் பணம் பறிக்கும் பணியைச் செய்து வருகின்றனர்.கரூர் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் என்னிடம் இது குறித்துத் தெரிவித்ததுடன் இந்த அட்டை செல்லுபடியாகுமா எனவும் கேள்வி எழுப்பினர். மக்களிடம் இருந்து பாஜகவினர் ரேசன்அட்டைகளையும் இந்த அட்டை வழங்குவதற்காக பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் என்று அவர் கூறினார்.

;