tamilnadu

புதுச்சேரி, கன்னியாகுமரி முக்கிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்

புதுச்சேரி, ஜன. 4- புதுச்சேரியில் வாக்காளர் பதிவு சிறப்பு ஞாயிறன்று (ஜன.5) முகாம் நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி கடந்த  டிசம்பர் மாதம் 16ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் பட்டியல்  சுருக்க திருத்தபணி வருகிற 15ஆம் தேதி வரை நடைபெறு கிறது. 1.1.2020ல் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளலாம். மேலும்  திருத்தங்களும் செய்து கொள்ளலாம். இதற்காக புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச்  சாவடிகளிலும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வசதிக்காக ஞாயிறன்று (ஜன. 5) சிறப்பு முகாம்  நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்ப டுத்தி கொள்றுமாறு புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி  சுர்பீர் சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

800 கிலோ ரேசன் அரிசி கடத்தல்

அருமனை, ஜன.4- வருவாய்த்துறை பறக்கும்படை தனி வட்டாட்சியர் சதான ந்தன் தலைமையில், துணை வட்டாட்சியர் அருள்லிங்கம், தனி  வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார், ஓட்டுநர் டேவிட் ஆகி யோர் கொண்ட குழு வியாழனன்று இனயம் புத்தன்துறை பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது கடற்கரை  பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக தார்பாயால் மூடப்பட்டி ருந்த இடத்தை சோதனை செய்ததில், சிறு சிறு மூட்டைகளில்  சுமார் 800 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்க ப்பட்டது. விசாரணையில், அந்த அரிசி மூட்டைகள் கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.  அரிசியை பறிமுதல் செய்து காப்புக்காடு அரசு கிட்டங்கியில்  ஒப்படைத்தனர். அரிசியை கடத்திச் செல்வதற்கு பதுக்கிய நபர்  யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத நல்லிணக்க புத்தாண்டு விழா

நாகர்கோவில், ஜன.4- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மத நல்லி ணக்க கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா சகாயநகர் ஆலய  வளாகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.ஏ.சலாம்  தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் மரிய வின்சென்ட்,  சுனில்குமார், மீனாட்சிசுந்தரம், சகாயநகர் பங்கு  பணியாளர் டைட்டஸ் மோகன், பங்கு நிர்வாகி செல்வராஜ்,  சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ஜி.சுப்பிர மணியம், மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது ஆகியோர் பேசினர்.

;