tamilnadu

ராட்டினம் இயக்குவதற்கு ஆட்சியர் தடை

கடலூர், ஜன.20- ஆற்றுத்திருவிழாவினை முன்னிட்டு கடலூரில் தென்பெண்ணையாற்றில் கடந்த சில நாட்களாகவே பொழுதுபோக்கு அம்சங்க ளுடன் கூடிய ராட்டினம் மற்றும் கடைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்ட ராட்டினத்திற்கு பொதுப்  பணித்துறையிடமிருந்து உரிய அனுமதி  பெறவில்லையென மாவட்ட ஆட்சியருக்கு  புகார் சென்றது. இதுகுறித்து, உரிய விசா ரணை நடத்திட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் உத்தர விட்டார். இதனையடுத்து நடத்தப்பட்ட விசா ரணையில் ஆற்றில் ராட்டினம் அமைப்ப தற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அதற்கு சரியானது தானா என்பதை ஆராய்ந்து பொதுப்பணித்துறை வழங்கும் சான்று பெறவில்லை என்பது தெரிய வந்தது.  இதனையடுத்து, அந்த ராட்சத ராட்டி னத்திற்கு சீல் வைக்க ஆட்சியர் உத்தர விட்டார். இதன்பின்னர், கடலூர் வட்டாட்சியர் கோ.செல்வகுமார், காவல்துறை துணை கண்காணிப்பாளர் க.சாந்தி ஆகியோர் இயங்கிக் கொண்டிருந்த ராட்டினத்தை நிறுத்தி அதற்கு சீல் வைத்தனர். கடந்தாண்டே முறையாக அனுமதி பெறா மல் இந்த ராட்டினம் இயங்கியதாக பொது மக்கள் குற்றம் சாட்டிய நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

;