சிதம்பரம், ஜன. 5- தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் ஜனவரி 15 ஆம் தேதி துவங்குகிறது. இந்த ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகர மாய் இருக்க வேண்டும் என அதிகாலையில் புதிய மண்பானையில், பொங்க லிட்டு ‘பொங்கலோ பொங்கல்’ எனக் கூறி மக்கள் பொங்கல் விழாவை கொண்டாடுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக மண்பானைகளில் பொங்கல் வைக்கும் வழக்கம் மாறிவிட்டது. கிராம பகுதிகளில் சில வீடுகளில் மட்டும் மண்பானையில் பொங்கல் வைக்கும் வழக்கம் தொடர்கிறது. நகர் பகுதியில் சில்வர் பாத்திரங்க ளில் பொங்கல் வைக்கின்ற னர். இதனால் மண்பான்ட தொழிலாளர்களின் வாழ்வா தரம் பாதிக்கப்பட்டுள்ளது என சிதம்பரம் அருகேயுள்ள குமாரமங்கலம் கிரா மத்தில் உள்ள மண்பான் தொழிலாளர்கள் கூறு கிறார்கள். பாரம்பரியமாக தமிழ ர்கள் கொண்டாடும் விழாக்க ளில் பொங்கல் பண்டிகை மிகவும் முக்கியமானது. ஆண்டுக்கு ஒரு முறை அனைவரும் பொங்கல் தினத்தில் மண்பானையில் பொங்கல் வைத்தால் எங்களின் வாழ்வாதாரம் உயரும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதேநேரத்தில் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தமிழக அரசு கரும்புகளை கொள்முதல் செய்து பொங்கல் தினத்தினத்தில் அனை வருக்கும் வழங்கி வருகிறது. அதுபோல, மண் பானை களை கொள்முதல் செய்து நியாயவிலை கடைகள் மூலம் வழங்க வேண்டும். அப்படி செய்தால் எங்களது வாழ்வாதாரம் காக்கப்படும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.