tamilnadu

நகைக்கடையில் 100 பவுன் திருடிய ஊழியர் கைது

கடலூர், ஜன. 9- கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்தவர் வீரப்பன் மகன் முரளி (45). சுப்புராய செட்டித் தெருவில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 3 ஆம் தேதி தனது கடையில் நகைகள் இருப்பு குறித்து கணக் கெடுப்பு நடத்தினார். அப்போது, 833. 200 கிராம் மதிப்பிலான (104 பவுன்) நகைகள் காணாமல் போயி ருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 24. 84 லட்ச மாகும்.  இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து, தனிப்படை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், நகைக் கடையில் நெக்லஸ் பிரிவின் பொறுப்பாளர் கடலூர் சான்றோர் பாளை யத்தைச் சேர்ந்த கலைச் செல்வம் (29) என்பவர் தான் நகைகளைத் திருடியது தெரிய வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக இக்கடையில் வேலைபார்த்து வரும் இவர், 2 ஆண்டுகளாக சிறுக சிறுக நகைகளைத் திருடி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.  இதனையடுத்து, கலைச்செல்வத்தை காவல் துறையினர், தனியார் அடகுக்கடையில் அடகு வைத்த 97 பவுன் (777.2 கிராம்) நகையை மீட்டனர். மேலும், அவரிடமிருந்த 2 இருசக்கர வாகனம், எல்.சி.டி டிவி ஆகியவற்றை காவல்துறையினர் பறி முதல் செய்தனர்.