கடலூர், ஜன.28- தமிழக கடலோர மாவட்டங்களில் பாலை வனமாக்க முயற்சிக்கும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மீனவர்கள், விவசாயிகளின் வாழ்வா தாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால் கண்டனம் தெரிவித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். கடலூர் தொகுதி மக்க ளவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ், மேற்கு மாவட்டச் செயலாளர் வே.கணே சன், சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்தி ரன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.