திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

வடலூர் சத்திய ஞான சபை தைப்பூச விழாவுக்கு கட்டுப்பாடு....

கடலூர்:
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி பொதுமக்கள் பங்கேற்க ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபையில் 150ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 30ஆம் தேதி வரை தைப்பூச விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.இதன் முக்கிய நிகழ்வாக 28ஆம் தேதி ஏழு திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் வரும் 30ஆம் தேதி மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள சித்திவளாகத் திருமாளிகையில் திருவறை தரிசன நிகழ்ச்சியானது நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி தெரிவித்துள்ளார்.

;