tamilnadu

சிதம்பரம் அருகே வெறி பிடித்த குரங்கு பொதுமக்கள் அச்சம்

சிதம்பரம்,ஏப்.28-கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு கடந்த20 நாட்களுக்கு முன்பு ஒருகுரங்கு வந்தது. அது,கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடித்துக் குதறி வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது. அந்த குரங்கு குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. கீதா என்பவரின் 3 வயது பெண் குழந்தையை தலை மற்றும் கைகளில் கடித்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.வெறிபிடித்த குரங்கை பிடிக்க வனத்துறைக்கு புகார் கொடுத்தனர். இதனையடுத்து, அந்த கிராமத்திற்கு வந்த வனத்துறையினர் கூண்டு வைத்து காத்திருந்தனர். கூண்டில் சிக்காமல் குரங்கு தப்பித்து ள்ளது.அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெறி பிடித்த குரங்குஎப்போது கடிக்குமோ என்ற பயத்தில் உள்ளனர். விரைவில் வனத்துறையினர் குரங்கை பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

;