சென்னை, ஜன. 4- வாக்கு எண்ணிக்கை மைய கண்காணிப்பு கேமிரா பதிவுகளில் திருத்தம் செய்யக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தாமதப் படுத்தப்படுவதாக திமுக தொடர்ந்த வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் விதி களுக்குட்பட்டுத்தான் தேர்தல் நடத்தப்படுவ தாக தெரிவிக்கப்பட்டது. மாநிலத் தேர்தல் ஆணையத்தின் விளக்கத்திற்கு சாட்சியாக வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். கண்காணிப்பு நடைமுறைகள் முடியாததால் சி.சி.டி.வி. பதிவுகளை தற்போது தாக்கல் செய்ய முடியாது என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கண் காணிப்பு கேமரா பதிவுகளில் திருத்தம் செய்யக் கூடாது என்று கூறிய நீதிபதி, தேர்தல் ஆணை யத்தின் விளக்கத்தை ஏற்று விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.