காஞ்சிபுரம், ஜன.24- தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினி காந்த் தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உத்திரமேரூர் அருகே பெரியார் சிலையை சமூக விரோதி கள் சேதப்படுத்தியுள்ளனர். உத்திரமேரூரை அடுத்த சாலவாக்கம், களியப்பட்டியில் பெரியார் சிலை உள்ளது. வியாழனன்று இரவு வந்த மர்ம கும்பல் பெரி யார் சிலையை உடைத்து சேதப்படுத்தியது. வெள்ளியன்று காலை பெரியார் சிலை சேத மாகியிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சாலவாக் கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.