சென்னை,டிச.26- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டமாக, நாளையும் வரும் 30-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் நேரங்களில் அசம்பாவி தங்களை தடுக்க 48,579 போலீசாரும் காவல்துறை நண்பன் திட்டத்தில் பணி யாற்றும் 14,500 பேரும் என மொத்தம் 63 ஆயிரத்து 79 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என டி.ஜி.பி. அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை பாது காப்பு தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.