சென்னை,ஜன.24- நதிநீர் பிரச்சனை தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விரைவில் தமிழகம் வந்து முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமியை சந்திக்க உள்ளதாக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரி வித்துள்ளார். கன்னியாகுமரியில் 15 கோடி ரூபாய் மதிப் பீட்டில் விருந்தினர் மாளிகை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சென்னை யில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கேரளா சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டிய ராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அதன் பின்னர், மூவரும் கூட்டாக செய்தியாளர் களை சந்தித்தபோது இதனை தெரி வித்தனர்.