சென்னை,நவ.12- தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதித் தேர்வு வரும் 18 ஆம் தேதிமுதல் மீண்டும் தொடங்கப்படும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலருக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. இதனிடையே நவம்பர் 15 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவிருந்த இத்தேர்வு கடந்த 6,7,8 ஆகிய மூன்று தினங்களில் மட்டுமே நடந் தது. இந்நிலையில் பாபர் மசூதி வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிரொலியாக தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் வருகிற 18-ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தமிழகம் முழுவ தும் போலீஸ் உடல் தகுதித் தேர்வு மீண்டும் நடைபெற உள்ளது என தமிழ்நாடு சீரு டைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித் துள்ளது. மேலும் உடற்தகுதித் தேர்வு நடக்க விருக்கும் 15 மையங்களுக்கும் அவசர சுற்ற றிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.