tamilnadu

img

சட்டமன்றத் துளிகள்...

கை குலுக்கல்...

சட்டப்பேரவையில் வெளிநடப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்துவிட்டு, மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு சென்றார். அப்போது, அமமுக பொதுச் செயலாளரும் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.-வுமான டிடிவி தினகரன்  எதிரே வந்தார். எதிர்பாராத இந்த சந்திப்பின்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். 

பொள்ளாச்சியின் சிரிப்பலை....

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், “தனது பேச்சை நிறைவு செய்யும் பொழுது நூற்றாண்டை நிறைவு செய்யும் ‘பொள்ளாச்சி நகரம் புனிதமான நகரம்’. என்றார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது. திமுக உறுப்பினர் ஜெ. அன்பழகன் பேசும்பொழுது “பொள்ளாச்சிக்கு என்று ஒரு சிறப்பு உள்ளது” அந்த சிறப்பை நாடே அறியும்  என்று கூறியபோது ஆளுங்கட்சி தரப்பினர் நெளிந்தனர்.

 

;