tamilnadu

img

சட்டமன்றத் துளிகள்...

நான் புதியவன் அல்லன்...

15 வது சட்டப்பேரவையின் 8 வது கூட்டத் தொடரில்  முதல் நாள் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  தின் உரையுடன் திங்களன்று (ஜன.6) காலை 10 மணிக்கு தொடங்கியது. உடனே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசத்  துவங்கினார். அப்போது, ஆளுநர், “என்னை பேச அனு மதிக்க வேண்டும். நான் புதியவன் அல்ல. இரண்டு  ஆண்டு காலமாக தமிழகத்தில் இருக்கிறேன். எனக்கு  எல்லாம் தெரியும். நீங்கள் நல்ல பேச்சாளர். இதைப்பற்றி  பிறகு விவாதிக்கலாம்” என ஆளுநர் தெரிவித்தார். மீண்டும் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டா லின்’ “பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க ஆளுநர் உரையை தள்ளி வைத்து விவாதிக்க வேண்  டும்” என்றார். பிரச்சனைகள் குறித்து விவாதிக்க  சட்டப்பேரவையின் விவாத நேரத்தை பயன்படுத்திக்  கொள்ளுங்கள் என ஆளுநர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஆளுநர், பொங்கல் பண்டி கைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து தனது உரையை தொடங்கினார். நகர்புற உள்ளாட்சித் தேர்தல்  கள் மிக விரைவில் நடைபெறும் என்றும் கூறினார்.

பாசமும்-நேசமும்...

ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த தமீம் அன்சாரி, தனது கையில் தேசியக் கொடியை ஏந்தியவாறு சட்டசபையிலிருந்து வெளியே  வந்தார். அப்போது அவருக்கு ஆதரவு அளிக்கும் வண்  ணம் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்,  தமீம் அன்சாரி கையில் இருந்து தேசியக் கொடியை  பிடித்து அசைத்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.

காலி மைதானம்...

ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக  காங்கிரஸ் இந்தியன் யூனியன் முஸ்லிம் ஆகிய கட்சி  உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அமுமுக தின கரன், தமீம்  அன்சாரியும் வெளியேறியதால் எதிர் வரிசையிலிருந்த அனைத்து இருக்கைகளும் காலியாக காட்சியளித்தது. கொங்கு இளைஞர் பேர வையின் தனியரசு மட்டுமே தன்னந்தனியாக அமர்ந்தி ருந்தார் அவரும் சிறிது நேரத்துக்குப்பிறகு  வெளி நடப்பு செய்ததால் பேரவையின் இடது புறம் காலி மைதானமாக  காட்சியளித்தது.

எதிர்க் கட்சிகளுடன்...

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற தமீம் அன்சாரி, கொங்கு இளை ஞர் பேரவையின் தனியரசு இருவரும் சட்டப்பேரவை யில் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தாலும், அவர்  கள் சார்ந்த கட்சிகளின் அடிப்படையில் குடியுரிமை  சட்டத் திருத்தம், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின்  விடுதலை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலம் தாழ்த்தி வருவது உள்ளிட்ட பல்வேறு  பிரச்சனைகளில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி களோடு இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.