tamilnadu

img

உ.பி: சாலை விபத்தில் சிக்கி 14 பேர் பலி 

உத்திரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 14பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உத்திரபிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே பிரயாக்ராஜ் லக்னோ நெடுஞ்சாலையில் வியாழனன்று நள்ளிரவில் லாரி மீது வேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. 
பிரதாப்கர் குண்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் நவாப்கஞ்சி பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கார் ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.