செவ்வாய், மார்ச் 2, 2021

tamilnadu

img

கரும்பு விவசாயிகளின் போராட்டம் வெற்றி கரும்பு பாக்கி ரூ.64 கோடியை தர சக்தி சர்க்கரை ஆலை ஒப்புதல்

ஈரோடு, ஆக. 20-  கரும்பு விவசாயிகளின் போராட்டத்தின் எதிரொலி யாக, ஆறுமாத காலமாக நிலுவையிலுள்ள கரும்பு பாக்கியில் ரூ.64 கோடியை வழங்க சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆறு மாத காலமாக வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை உடன டியாக வழங்க வேண்டும். ஆகஸ்ட் மாதம் அரைத்த கரும்பு பணத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் ஆப்பக்கூடல் சக்தி சர்க் கரை ஆலை முன்பு புதனன்று கரும்பு விவசா யிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதன் எதிரொலியாக, வியாழனன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ரூ.64 கோடி கரும்பு நிலுவைத் தொகை வழங்கப்படும் என சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் உறு தியளித்தது.    முன்னதாக, இப்பேச்சுவார்த்தையில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் டி.ரவீந்திரன், மாவட்ட தலைவர் டி.பி.கோபிநாத், மாவட்ட செயலா ளர் ஏ.எம்.முனுசாமி, கரும்பு பயிர் வளர்ப் போர் சங்க செயலாளர் சென்னியப்பன், தற் சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன் னையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

;