ஈரோடு, ஜன. 12- ஓராண்டுக்குப் பின் மல் லிகை பூவின் விலை 3 ஆயி ரம் ரூபாயை கடந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட கிரா மங்களில்,ஆயிரக்கணக் கான ஏக்கர் பரப்பில் மல் லிகை, முல்லை உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப் பட்டு வருகிறது. இதனி டையே ஒரு மாதமாக கடும் பனிப்பொழிவால், பூக்க ளின் வரத்து குறைந்த நிலை யில், உரிய விலை கிடைக்க வில்லை.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்க ளாக சுற்று வட்டார திருவி ழாக்களால், பூக்களின் தேவை அதிகரித்து விலை யும் உயர்ந்தது. இதனைத்தொடர்ந்து சத்தி பூ மார்க்கெட்டில் வெள் ளியன்று ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ.1,820 கும், சனியன்று ரூ.1,548 கும் உயர்ந்தது. இதனையடுத்து படிப்படி யாக உயர்ந்த மல்லிகை பூவின் விலை தற்போது ரூ.3,368 க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் வியா பாரிகள் பெரும் மகிழ்ச்சிய டைந்துள்ளனர்.